FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போக்சோ வீரமணி வீட்டில் சிறுமியின் சடலம்? போலீசார் தீவிர சோதனை!

போக்சோ வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அவரது டிரைவர் அளித்த வாக்குமூலத்தின்படி போலீசார் சோதனை...

40 வினாடிகள் முன்பு
வீரமணி - கோப்புப் படம்
பகிர்:

போக்சோ வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் சிறுமியின் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக அவரது டிரைவர் அளித்த வாக்குமூலத்தின்படி வீரமணியின் வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

Advertisement

Advertisement

இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில் தொடர்புடையதாக வீரமணியின் உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு என இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டனா். இதுவரை 12க்கும் மேற்பட்ட சிறுமிகள் வாக்குமூலம் அளித்து 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் குற்றப்பத்திரிக்கை சமீபத்தில் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து இந்த வழக்கில், வீரமணியின் வீட்டில் சிறுமியின் சடலம் இருப்பதாக வீரமணியின் தனிப்பட்ட ஓட்டுநர் பாலா வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் டிரைவர் அளித்த வாக்குமூலத்தின்படி, ராயப்பேட்டையில் உள்ள வீரமணியின் வீட்டின் பின்புறத்தில் ஜேசிபி இயந்திரம் கொண்டு தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. தடயவியல் நிபுணர்களும் அங்கு சென்றுள்ளனர்.

கிடைக்கும் ஆதாரங்கள் அடிப்படையில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

வீரமணியின் வீட்டில் சோதனை நடைபெற்று வருவதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

summary

sources said Body of a girl at the home of POCSO Veeramani: police search

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.