FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

16 வயது சிறுமியின் போக்சோ வழக்கின் தரவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் 5 பிரிவுகளின் கீழ் கைது

16 வயது சிறுமியின் போக்சோ வழக்கின் தரவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் 5 பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறித்து...

சிறுமியின் போக்சோ வழக்கின் தரவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்டவர் 5 பிரிவுகளின் கீழ் கைது - கோப்புப்படம்
பகிர்:

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே 16 வயது சிறுமியின் போக்சோ வழக்கின் தரவுகளை சமூக வலைதளத்தில் வெளியிட்ட நபர் போக்சோ வழக்கு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் ராணிப்பேட்டை மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் 16 வயது சிறுமியின் அடையாளங்களை வெளியிட்டு தலைமறைவான குற்றவாளிகள் மூவரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தில் பழங்குடியின 16 வயதான சிறுமியை அதே பகுதியை சேர்ந்த இரண்டு வாலிபர்கள் மிரட்டி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதில் அந்த சிறுமி 8 மாதம் கர்பமானதால் சம்பந்தப்பட்ட இருவரும் நான் இல்லை அவர்தான் என மாறி, மாறி குற்றம்சாட்டியுள்ளனர். அதன்பின் இந்த தகவல் 1098-க்கு தகவல் வந்ததின் அடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் மூலம் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே ஆய்வாளர் லதா தலைமையிலான போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டு இருவரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Advertisement

Advertisement

இந்த வழக்கில் மேற்கொண்ட இருவரில் ஒருவருக்கு நெருக்கமான ஆற்காடு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (50) என்பவர் சிறுமியிடம் ஒருவரை மட்டும் சொல் என விடியோ எடுத்து அந்த சிறுமியின் அடையாளத்தை வெளியிட்டதோடு உண்மைக்கு புறமான தகவல்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக தெரிகிறது.

இந்த வழக்கு தொடர்பான உண்மைக்கு புறம்பாகவும் சிறுமியின் விடியோவையும் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பாஸ்கர் மீது போக்சோ உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் லதா, அவரை கைது செய்து ராணிப்பேட்டை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய ஆற்காடு பகுதியை சேர்ந்த ஆனந்தன்(45), சுனில் குமார்(40), ரத்தனகிரி பகுதியை சேர்ந்த தாமோதரன்(35) உள்ளிட்ட தலைமறைவான குற்றவாளிகளை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Man arrested under 5 sections for posting details of 16-year-old girl's POCSO case on social media

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments