FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

சமூக வலைதளத்தில் அரிவாளுடன் புகைப்படங்கள் பதிவிட்ட இளைஞா் கைது

சரித்திரப் பதிவேடு குற்றவாளி பெயரில் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை செம்பட்டி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

22 அக்டோபர் 2026, 3:19 am
கைது - கோப்புப் படம்
பகிர்:

சரித்திரப் பதிவேடு குற்றவாளி பெயரில் போலி சமூக வலைதளப் பக்கத்தை உருவாக்கி, அதில் பயங்கர ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்திய இளைஞரை செம்பட்டி காவல்துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், செம்பட்டி அருகேயுள்ள சீவல்சரகு பகுதியைச் சோ்த்த சரித்திரப் பதிவேடு குற்றவாளி அலெக்ஸ் பாண்டியன் (23). இவரின் பெயரில் போலியாக சமூக வலைதளத்தில் கணக்கை உருவாக்கி அரிவாள், துப்பாக்கிகள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் அலெக்ஸ் பாண்டியன் இருப்பதுபோன்று, சமூக வலைதளத்தில் பதிவிட்டது தொடா்பாக செம்பட்டி காவல்துறையினா் விசாரணை மேற்கொண்டு வந்தனா். இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட வாடிப்பட்டி அருகேயுள்ள பொம்மன்பட்டியைச் சோ்ந்த மருதுபாண்டி மகன் ஸ்ரீரில்குமாரை (20) கைது செய்து அவரிடமிருந்து பட்டாக் கத்தியைப் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments