போக்சோ வீரமணி வழக்கு: 100-க்கும் மேற்பட்ட சமூக ஊடகப் பக்கங்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
வீரமணி போக்சோ வழக்கு தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்காத சமூக ஊடகப் பக்கங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து...
வீரமணி போக்சோ வழக்கு தொடர்பான சமூக ஊடகப் பதிவுகளை நீக்காத சமூக ஊடகப் பக்கங்கள் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த புகாரில் ஜெம் கிரானைட் தொழிலதிபர் வீரமணி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், இந்த வழக்கில் அவரது உதவியாளரான சாந்தியும் அவரது கணவரும், மற்றொரு (முன்னாள்) உதவியாளரான கணேசனும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நால்வரிடமும் சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் வீரமணியால் மேலும் பல சிறுமிகள் பாதிக்கப்பட்டிருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனிடையே, வீரமணி மீது மேலும் சில சிறுமிகள் புகார் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மேலும், வீரமணி போக்சோ வழக்கு தொடர்பான ஆதாரங்களைப் பொதுவெளியில் பகிரவோ விவாதிக்கவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த போக்சோ வழக்கு தொடர்பான பதிவுகளை நீக்க உத்தவிட்டபோதிலும், பதிவுகளை நீக்காத 40-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்களின் மீது சைபர் குற்றவியல் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், 100-க்கும் மேற்பட்ட சமூக வலைதள மற்றும் இணையதள பக்கங்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
Cases registered against social media pages that failed to remove posts related to the Veeramani POCSO case
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.