போக்சோ வீரமணி ஓட்டுநரின் ஜாமீன் மனு தள்ளுபடி!
போக்சோ வீரமணியின் ஓட்டுநர் பார்த்திபனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
ஜெம் கிரானைட் வீரமணி மீதான போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட ஓட்டுநர் பார்த்திபனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக, ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான போக்சோ வழக்கில், அவருக்கு உடந்தையாக இருந்ததாக ஓட்டுநர் பார்த்திபன் என்பவரை சிறப்பு புலனாய்வு குழு அக்டோபர் 5ல் கைது செய்தது.
இந்த நிலையில் அவரது ஜாமீன் மனு சென்னை போக்சோ நீதிமன்றத்தில் அக்டோபர் 22ஆம் தேதி தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்த்திபன் மனு தாக்கல் செய்திருந்தார்.
Advertisement
Advertisement
இந்த மனு நீதிபதி என். ரமேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தனக்கும் போக்சோ வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதால், ஜாமீன் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது.
ஆனால், காவல்துறை தரப்பில் ஜாமீன் வழங்கினால் சாட்சிகள் கலைக்க வாய்ப்பு உள்ளதால், ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கபட்டது.
இதையடுத்து, தற்போதைய நிலையில் ஜாமின் வழங்க முடியாது என கூறி, ஓட்டுநர் பார்த்திபன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.