போக்சோ வீரமணி வழக்கில் மேலும் ஒருவர் கைது!
போக்சோ வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது குறித்து...
போக்சோ வீரமணி மீதான பாலியல் வழக்கில் மேலும் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழு இன்று (நவ. 1) கைது செய்துள்ளது.
வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவது தெரிந்தும் தகவல் கொடுக்காமல் இருந்ததற்காக வீரமணி வீட்டின் காவலாளியான சீனிவாசன் என்பவரை காவல் துறை கைது செய்துள்ளது.
இந்த வழக்கில், ஏற்கெனவே 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
Advertisement
Advertisement
சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட் நிறுவன உரிமையாளா் வீரமணி வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த விவகாரம் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையா் தேன்மொழி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக வீரமணியின் உதவியாளா் சாந்தி, அவா் கணவா் மகேந்திர சிம்ஹன், கணேசன், மேலாளர் சக்திவேல், காா் ஓட்டுநா்கள் லாசா், பாா்த்திபன், பாபு, ஆகியோா் ஆகியோா் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனா்.
இதுவரையில் 12 சிறுமிகள் அளித்த புகார்களின் அடிப்படையில் மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் சம்பந்தப்பட்ட 5 பேர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்-அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீட்டுக்கு குழந்தைகளை அழைத்து வருவது தெரிந்தும் தகவல் கொடுக்காமல் இருந்ததற்காக வீரமணி வீட்டின் காவலாளி சீனிவாசனை சிரப்பு புலனாய்வுக் குழு கைது செய்துள்ளது.
Another person arrested in the POCSO case involving Veeramani
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.