FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

போக்சோ வீரமணி வழக்கு: தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

போக்சோ வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு...

வீரமணி - சென்னை உயர்நீதிமன்றம் - கோப்புப்படம்
பகிர்:

போக்சோ வீரமணி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் பிரகாஷ் முன்ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம், நவம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜெம் கிரானைட்ஸ் உரிமையாளர் வீரமணிக்கு எதிரான வழக்குகளை சிறப்புப் புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. வழக்கில் நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காக, காவல் துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க உதவியதாக ரயில்வே தொழிற்சங்க தலைவர் கண்ணையாவின் மகன் பிரகாஷ் மீது காவல் துறை குற்றம் சாட்டியுள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, விசாரணைக்கு ஆஜராக பிரகாஷுக்கு காவல் துறை சம்மன் அனுப்பப்பட்டது. அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமக்கு எதிரான குற்றச்சாட்டில் தான் கைது செய்ய வாய்ப்பு உள்ளதால் வழக்கில் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என பிரகாஷ், சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, பிரகாஷ் தரப்பில் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி சுந்தர மோகன் முன் விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவுக்கு பதிலளிக்க பிரகாஷ் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

summary

Veeramani POCSO case: businessman Prakash anticipatory bail plea adjourned

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.