சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்!
சென்னை போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்படுத்தப்பட்டுள்ளது பற்றி...
பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைதாகியுள்ள ஜெம் கிரானைட்ஸ் நிறுவனர் வீரமணி, சென்னை போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்ததாக போக்சோ வழக்கில் ஜெம் கிரானைட் நிறுவனர் வீரமணி கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவர் மீது தொடர்ந்து பல சிறுமிகள் புகாரளித்து வருகின்றனர். இதுவரை 15க்கும் மேற்பட்ட சிறுமிகள் புகார் அளித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்த வழக்கில் வீரமணியின் குற்றத்துக்கு உடந்தையாக இருந்த சாந்தி, மகேந்திர சிம்ஹன் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் வீரமணி ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.
Veeramani appears before the Chennai POCSO Court
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.