FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நான்கு வீடுகளில் நகை, பணம் திருட்டு

சென்னை மயிலாப்பூர் பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 வீடுகளில் திங்கள்கிழமை பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து

9 ஜனவரி 2024, 12:13 pm
பகிர்:

சென்னை மயிலாப்பூர் பகுதியில் அடுத்தடுத்துள்ள 4 வீடுகளில் திங்கள்கிழமை பூட்டை உடைத்து நகை, பணம் திருடப்பட்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 மயிலாப்பூர் மந்தவெளி சந்துப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் கீழ் தளம், முதல் தளத்தில் மொத்தம் 4 வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் வசிப்போர் வீட்டைப் பூட்டிவிட்டு பணிக்குச் சென்று விட்டனர்.
 இந்தநிலையில், பகல் 1 மணி அளவில் அந்த 4 வீடுகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது. இது குறித்து முதல் தளத்தில் உள்ள தனியார் மருத்துவமனை ஊழியர் ஆனந்தகுமாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, அங்கிருந்த வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதேபோன்று அருகே உள்ள மற்றொரு வீட்டில் 5 பவுன் நகை, பணமும் திருடப்பட்டிருந்தது. மேலும், மற்றொரு வீட்டில் பெட்டி ஒன்றும் திருடப்பட்டுள்ளது. இருப்பினும் எஞ்சிய ஒரு வீட்டின் பூட்டி உடைக்கப்பட்டிருந்த நிலையில் அந்த வீட்டில் எந்தப் பொருளும் திருடப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments