FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏழைகள் மீது அக்கறை இல்லாதவர் மோடி:ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றச்சாட்டு

ஏழைகள் நலனில் பிரதமர் மோடி அக்கறை செலுத்துவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றஞ்சாட்டினார்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

ஏழைகள் நலனில் பிரதமர் மோடி அக்கறை செலுத்துவதில்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றஞ்சாட்டினார்.

காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மண்டல மாநாடு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தலைமையில் சென்னையை அடுத்த கொளப்பாக்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த மாநாட்டில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் ஆகிய மாட்டங்களைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசியதாவது:

பெண்கள், தலித்துகள், விவசாயிகள் மீது அக்கறை கொண்ட கட்சி காங்கிரஸ் கட்சி. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் ஆடை வாங்க முடியாத நிலையில் ஏழைகள் தவித்து வரும் நிலையில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஆடைகள் அணிவதில் ஆர்வம் காட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. ஏழைகள் நலனில் அவர் அக்கறை செலுத்துவதில்லை.

Advertisement

Advertisement

பாஜகவின் விவசாய விரோதப் போக்கை தடுத்து நிறுத்தி விவசாயிகளைக் காப்பாற்றியது சோனியா காந்தியும், ராகுல் காந்தியும்தான் என்றார். தேசியச் செயலாளர் சின்னா ரெட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் குமரி அனந்தன், தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு உள்ளிட்ட ஏராளமானோர் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments