கஞ்சா பறிமுதல்:3 பேர் கைது
சென்னை சேத்துப்பட்டில் 21 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை சேத்துப்பட்டில் 21 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேத்துப்பட்டு போலீஸார் கோபால்சாமி நகர் கெங்குரெட்டி சுரங்கப்பாதை அருகே வெள்ளிக்கிழமை ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீஸார், அவர்களை சோதனையிட்டனர். இச் சோதனையில் அவர்களிடம் 21 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே போலீஸார், கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் சேத்துப்பட்டு மங்களாபுரம் 3வது தெருவைச் சேர்ந்த கஞ்சா வியாபாரி ஜெ.தங்கையா (52), எம்.எஸ்.நகர் முதலாவது தெருவைச் சேர்ந்த மெ.பாலசுப்பிரமணியன் (42), அமைந்தகரை எம்.எம்.காலனியைச் சேர்ந்த பா.பாலாஜி (44) என்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதைத் தொடர்ந்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைது செய்து, வழக்குப் பதிவு செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.