பொது இடம் ஆக்கிரமிப்பு :ஆணையர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம்
பொது இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்.
பொது இடத்தை ஆக்கிரமித்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தை தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
துரைப்பாக்கம் கல்லுக்குட்டை பகுதியில் அரசுக்குச் சொந்தமான இடத்தை, தனி நபர் ஆக்கிரமித்து வருவதாக தமிழ்நாடு ஏழை எளியோர் நடுத்தர மக்கள் நலச் சங்கத்தினர் புகார் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக, அந்த அமைப்பினர், துரைப்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் செய்தனராம். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.
Advertisement
Advertisement
இதையடுத்து அந்த அமைப்பினர், வேப்பேரியில் உள்ள சென்னை பெருநகரக் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு புகார் செய்ய வெள்ளிக்கிழமை வந்தனர். அங்கு திடீரென அவர்கள், ஆணையர் அலுவலக வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைப் பார்த்த போலீஸார், அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர். பின்னர், ஆணையர் அலுலகத்துக்குள் சென்று புகார் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.