FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மின்வாரிய ஓய்வூதியர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுகோள்

மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் உரிய படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் உரிய படிவங்களை வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
 தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழகம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
 மின்வாரிய ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள், கருணைத் தொகை பெறுபவர்கள் அனைவரும் நிகழாண்டு முதல் புதிய வாழ்நாள் சான்று, பணியின்மை, மறு வேலைவாய்ப்பு சான்று படிவம், மணமாகாத, மறுமணம் புரிந்தமைக்கான சான்று படிவங்களை ஓய்வூதியம் பெறும் வங்கியில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே, ஜுன் மாதத்துக்குள் உரிய படிவங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
 இதற்கான படிவங்களை http: www.tangedco.gov.inic.pdf என்ற இணையதள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
 குறிப்பிட்ட காலத்துக்குள் படிவங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். இல்லையெனில், ஆகஸ்ட் மாதம் முதல் ஓய்வூதியம் நிறுத்தப்படும்.
 ஆகையால், உரிய காலத்தில் ஆவணங்களைச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அந்தச் செய்திக்குறிப்பில் மின் வாரியம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments