FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ரூ. 2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: பெண் கைது

வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

வெளிநாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள தங்கத்தை சென்னை விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
 மலேசியாவில் இருந்து வெள்ளிக்கிழமை காலை சென்னைக்கு வந்த விமானத்தில் பயணிகளின் உடைமைகளை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
 அப்போது, சுற்றுலா விசாவில் மலேசியா சென்று வந்த ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த சிந்துஜா (35) என்ற பெண்ணின் கைப்பை, சூட்கேசை சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது சூட்கேசில் தங்க கட்டிகள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மொத்தம் 6 கிலோ எடையுடன் 65 தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி.
 இதையடுத்து சிந்துஜாவை சுங்கத் துறை அதிகாரிகள் கைது செய்தனர். விசாரணையில் அவர் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments