FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞரை விரட்டிப் பிடித்த ரயில்வே காவலர்கள்

சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடந்துவந்தவரிடம் தங்க சங்கிலியைப் பறித்து, கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய இரு இளைஞர்களில் ஒருவரை ரயில்வே காவலர்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.

30 ஜனவரி 2024, 9:57 pm IST
தங்க சங்கிலியைப் பறித்துக் கொண்டு சென்றவரை விரட்டி பிடித்த காவலர்களை வியாழக்கிழமை பாராட்டிப் பரிசு வழங்கிய ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு.
பகிர்:


சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் நடந்துவந்தவரிடம் தங்க சங்கிலியைப் பறித்து, கத்தியால் தாக்கிவிட்டுத் தப்பி ஓடிய இரு இளைஞர்களில் ஒருவரை ரயில்வே காவலர்கள் விரட்டிப் பிடித்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் கோதண்டராமன் கோயில் தெருவைச் சேர்ந்த மஞ்சுநாத் (30), மாம்பலம் ரயில் நிலையத்தில் இருந்து புதன்கிழமை மாலை மின்சார ரயிலில் பூங்கா ரயில் நிலையத்துக்கு வந்தார். முதல் நடைமேடையில் நடந்து வந்தபோது பின்னால் வந்த ஒருவர் திடீரென மஞ்சுநாத் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடினர். மஞ்சுநாத் சத்தமிட்டதால் மற்றொருவர் கத்தியால் தாக்கி விட்டு இருவரும் தப்பியோடினர்
அங்கிருந்த ரயில்வே காவலர்கள் ரமேஷ், கீர்த்திவாசன், சுரேஷ்குமார் ஆகியோர் தப்பியோடிய இருவரையும் விரட்டிச் சென்றனர். அவர்களில் ஒருவர் மட்டும் பிடிபட்டார்.
போலீஸார் விசாரணையில் பிடிபட்டவர் சைதாப்பேட்டை கோகுல் (20) என்பது தெரியவந்தது. தப்பியோடியவர் பெயர் இளந்தென்றல் (20) என்பதும் தெரியவந்தது. கோகுல் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த தங்கச் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. 
தப்பியோடியவரை விரட்டிப்பிடித்த ரமேஷ், கீர்த்திவாசன், சுரேஷ்குமார் ஆகியோரை ரயில்வே ஏடிஜிபி சைலேந்திரபாபு பாராட்டிப் பரிசளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments