FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

புத்தாண்டு காலண்டர், நாள்குறிப்பு விற்பனை மும்முரம் 

ஆங்கிலப் புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் சென்னையில் காலண்டர், டைரி விற்பனை சூடுபிடித்துள்ளது. 

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பாரிமுனையில் உள்ள ஒரு கடையில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள முப்பரிமாண விநாயகர் டைரி, பக்கங்களை திருப்பினால் ஒலி எழுப்பும் டைரி குறித்து  விளக்குகிறார் உரிமையாளர். 
பகிர்:


ஆங்கிலப் புத்தாண்டு பிறப்புக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில் சென்னையில் காலண்டர், டைரி விற்பனை சூடுபிடித்துள்ளது. 
வீடுகள், கடைகள், தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், கட்சி, அரசு அலுவலகங்கள் என எங்கு சென்றாலும் அங்கு தினசரி, மாத காலண்டர்கள் தொங்கவிட்டிருப்பதை பார்க்க முடியும். இணையதளம், செல்லிடப்பேசி வருகைக்குப் பின்னர் காலண்டர் மீதான மோகம் குறைந்தபோதும் காலண்டர் விற்பனையாளர்கள் ஆண்டுதோறும் புதிய டிசைன்களை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டு பெங்களூரு, கொல்கத்தா, மேற்கு வங்கம், மும்பை, தமிழகத்தில் சிவகாசி, மதுரை உள்ளிட்ட இடங்களிலிருந்து சென்னைக்கு காலண்டர்கள், டைரிகள் விற்பனைக்கு வந்துள்ளன. 
ஆங்கிலப் புத்தாண்டு நெருங்குவதையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள காலண்டர் மொத்த விற்பனைக் கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. 
இது குறித்து பாரிமுனை மொத்த வியாபாரிகள் கே.சண்முகம், ஆர்.ராஜா உள்ளிட்டோர் கூறியது: செல்லிடப்பேசியில் பல ஆண்டுகளுக்கான தேதிகளைப் பார்க்கும் டிஜிட்டல் உலகத்திலும், காலண்டர் மீதான மக்களின் ஆர்வம் குறையவில்லை. ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதலே அடுத்த ஆண்டுக்கான காலண்டர்கள், டைரிகள் கேட்டு ஆர்டர்கள் குவியும்; இந்த ஆண்டு தயாரிப்புச் செலவு உள்ளிட்ட காரணங்களால் காலண்டர், டைரிகள் விலை 15 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 
இதனால் கடந்த நவம்பர் மாத இறுதியில் விற்பனை சற்று மந்தமாகவே தொடங்கியது. இருப்பினும் புத்தாண்டு நெருங்குவதால் கடந்த சில வாரங்களாக விற்பனை சூடுபிடித்துள்ளது. 
கடந்த ஆண்டுகளைப் போன்றே நிகழாண்டும் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய கடவுள்களின் படங்கள், இயற்கை காட்சிகள், குழந்தைகள் வண்ணப் படங்களுடன் கூடிய காலண்டர்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகின்றன. 
அனைத்து மத கடவுள்களின் படம் இடம்பெற்ற 3டி காலண்டர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர். 
தினசரி காலண்டர், மாத காலண் டர், டேபிள் காலண்டர் ஆகியன பல வண்ணங்களில் கிடைக்கின்றன. இந்தக் காலண்டர்கள் ரூ.40 முதல் ரூ.250 வரை விற்கப்படுகிறது. அதேபோன்று பாய்ல்டு எனும் பொருளால் தயார் செய்யப்பட்ட கிரிஸ்டல் காலண்டருக்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது ரூ.120 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்படுகிறது. 
இது தவிர தமிழ் மாத காலண்டர், ஆங்கில காலண்டர், இஸ்லாமிய காலண்டர், குஜராத்திகளுக்கான காலண்டர் என தனித்தனியாக விற்கப்படுகின்றன. ஒரு காலண்டர் ரூ.25 முதல் ரூ.300 வரை விற்பனையாகிறது.
டைரிகளைப் பொருத்தவரை வெவ்வேறு அளவுகளில், அதிகபட்சம் ஏ4 அளவு உள்ள டைரிகள் வரை விற்கப்படுகின்றன. பாக்ஸ் வடிவிலான டைரி இந்தாண்டு புதிய வரவாகும். ரூ.50முதல் ரூ.500 வரை டைரிகள் விற்கப்படுகின்றன. 12 சிறிய டைரிகளுடன்கூடிய “இயர் பிளானர்”ரூ.75-க்கு விற்கப்படுகிறது என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments