FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னை வர்த்தக மையத்தில் வீட்டு உபயோகப் பொருள் விற்பனைக் கண்காட்சி

நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை மொத்த விலையில் பர்னிச்சர்கள் விற்பனை, மலிவு 

Updated On : 29 ஜூன் 2018, 4:17 am IST
பகிர்:

நந்தம் பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 29) முதல் ஜூலை 2-ஆம் தேதி வரை மொத்த விலையில் பர்னிச்சர்கள் விற்பனை, மலிவு 
விலையில் வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி நடைபெறுகிறது.
இக்கண்காட்சியில், ஆன்லைன் விற்பனையில் புகழ்பெற்ற குயிக்கர் ஈஸி நிறுவனம் அதன் தயாரிப்புகளை விற்பனைக்கு வைக்கின்றது. அத்துடன் சென்னையில் உள்ள முன்னணி பர்னிச்சர் நிறுவனங்கள் பலவும் பங்கேற்கின்றன. கண்காட்சியில் சூடான், ஆப்பிரிக்கா, பர்மா தேக்குகள், சீசேம் மரங்களால் செய்யப்பட்ட வேலைப்பாடுள்ள பர்னிச்சர்கள் இடம்பெறுகின்றன.
தலையணைகள், மெத்தைகள், படுக்கை, மேசை விரிப்புகள், சமையலறை சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருள்களும் கண்காட்சியில் விற்பனை செய்யப்படவுள்ளன.
கண்காட்சி காலை 10 முதல் இரவு 8.30 மணி வரையிலும் பார்வையிடலாம். ஜூலை 2-ஆம் தேதி கண்காட்சி நிறைவுபெறுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments