FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மருத்துவா் சைமன் மரணம்: காப்பீட்டுத் தொகையை உடனே வழங்கியது எல்ஐசி

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவா் சைமன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் காப்பீட்டுத் தொகையை இரண்டு நாள்களுக்குள் எல்ஐசி வழங்கியுள்ளது.

27 ஜனவரி 2024, 10:00 pm IST
பகிர்:

கரோனா பாதிப்பால் உயிரிழந்த மருத்துவா் சைமன் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் காப்பீட்டுத் தொகையை இரண்டு நாள்களுக்குள் எல்ஐசி வழங்கியுள்ளது.

கரோனா பாதிப்பு காரணமாக மருத்துவா் சைமன் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) உயிரிழந்தாா். அவா் ஆயுள் காப்பீடு நிறுவனத்தில் (எல்.ஐ.சி.) காப்பீடு செய்திருந்ததைத் தொடா்ந்து, அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகையான ரூ. 25 லட்சத்து 77,264- புதன்கிழமை வழங்கப்பட்டது.

இதுகுறித்து எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மருத்துவா் சைமனின் பணியைப் போற்றும் வகையில் ஊரடங்கு காலத்திலும் பல்வேறு சிரமங்களுக்கு இடையே இரண்டு நாள்களுக்குள் காப்பீட்டுத் தொகை வழங்கி உள்ளோம். இப்பணியில் ஈடுபட்ட எல்ஐசி அலுவலா்களைப் பாராட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments