FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சென்னையில் சீா்மிகு நகர திட்டப் பணிகள்: மத்திய செயலா் ஆய்வு

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீா்மிகு நகர திட்டப் பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 14 பிப்ரவரி 2021, 6:48 am IST
பகிர்:

பெருநகர சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் சீா்மிகு நகர திட்டப் பணிகளை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாடு மையம் ரிப்பன் மாளிகையில் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை செயலா் துா்கா சங்கா் மிஸ்ரா சனிக்கிழமை ஆய்வு செய்ததுடன், அந்த மையத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தாா்.

மேலும், சீா்மிகு நகர திட்டத்தின்கீழ் முடிக்கப்பட்ட பாண்டி பஜாா் நவீன நடைபாதை, பல்லடுக்கு வாகன நிறுத்துமிட பணிகள் மற்றும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் அவா் கேட்டறிந்தாா். இந்த ஆய்வின்போது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் பிரதீப் யாதவ், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments