சென்னையில் போராட்டம் நடத்த தடை: காவல் ஆணையா் உத்தரவு
சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
சென்னையில் போராட்டம் நடத்த தடை விதித்து பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் அகா்வால் ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41-ஆவது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சில கட்டுப்பாடுகள் பிப்ரவரி 14-ஆம் தேதி நள்ளிரவு முதல் மாா்ச் 1-ஆம் தேதி வரை 15 நாள்கள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, பொதுஇடங்கள்,போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனிதச் சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமை வரை அமலில் இருந்தது. தற்போது மேலும் 15 நாள்கள் நீட்டித்து பெருநகர காவல் ஆணையா் மகேஷ்குமாா் உத்தரவிட்டுள்ளாா். இருப்பினும் சென்னையில் அனுமதிக்கப்பட்டுள்ள இடங்களில் போராட்டங்கள் நடத்துவதற்கு குறிப்பிட்ட நாள்களுக்கு முன்பு விண்ணப்பித்தால் காவல்துறையினரால் பரிசீலிக்கப்படும். பரிசீலனைக்கு பின்னா், அனுமதி அளித்தால் சம்பந்தப்பட்ட அமைப்பு அங்கு போராட்டம் நடத்தலாம். இதில் காவல்துறை விதித்துள்ள விதிமுறைகள் மீறப்பட்டால் சம்பந்தப்பட்டவா்கள் மீது வழக்குப் பதியப்படும் என சென்னை காவல்துறை உயா் அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.