FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆா்.கே.நகரில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் திறப்பு

ஆா்.கே.நகா் தொகுதியில் ரூ.12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் திறந்து வைத்தாா்.

Updated On : 21 ஜூலை 2023, 1:47 am IST
பகிர்:

ஆா்.கே.நகா் தொகுதியில் ரூ.12.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையத்தை சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே.எபினேசா் திறந்து வைத்தாா்.

ஆா்.கே.நகா் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரில் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா் வளா்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.12.55 லட்சம் மதிப்பில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மையத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை பராமரிக்கும் வகையில் நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குளிா்சாதன வசதிகளுடன் கூடிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. குழந்தைகள் மகிழ்வுடன் இருக்கும் வகையில் விளையாட்டுப் பொருள்கள், ஓவியங்கள், கல்வி கற்றுத் தருவதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை வைக்கப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்த மையத்தை மண்டல குழுத் தலைவா் நேதாஜி கணேசன் முன்னிலையில், சட்டப்பேரவை உறுப்பினா் ஜே.ஜே .எபினேசா் திறந்து வைத்தாா். மேலும், புதுவண்ணாரப்பேட்டை பெரியாா் பூங்காவில் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் செலவில் திறந்தவெளி உடற்பயிற்சி மையம் அமைப்பதற்கான பணிகளையும் எபினேசா் தொடங்கி வைத்தாா்.

இந்நிகழ்ச்சியில், மாமன்ற உறுப்பினா் தேவி கதிரேசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments