FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சந்தை மதிப்பில் 2வது இடத்தை கைப்பற்றிய பார்தி ஏர்டெல்!

பார்தி ஏர்டெல் அதன் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் 2வது மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை கைப்பற்றியது.

6 நவம்பர் 2026, 7:51 pm
ஏர்டெல்
பகிர்:

புதுதில்லி: ஜியோ பிளாட்ஃபார்ம்ஸை முந்தி, பார்தி ஏர்டெல் இன்று அதன் சந்தை மதிப்பீட்டின் அடிப்படையில் நாட்டின் 2வது மதிப்புமிக்க நிறுவனம் என்ற இடத்தை கைப்பற்றியது.

பங்குச் சந்தை முடிவில், மும்பை பங்குச் சந்தையில், பார்தி ஏர்டெல் பங்குகள் 1.66 சதவீதம் உயர்ந்து ரூ. 2,096.25 ஆக நிலைபெற்று 2.81% உயர்ந்து ரூ. 2,120 ஆக இருந்தது. மறுபுறம் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் பங்கு 0.90 சதவீதம் சரிந்து ரூ. 1,405.75 ஆக நிலைபெற்று 2 சதவீதம் சரிந்து ரூ. 1,390 ஆக உள்ளது.

இதனையடுத்து, பார்தி ஏர்டெல்லின் சந்தை மதிப்பு ரூ. 13 லட்சம் கோடியாகவும், ஜியோ பிளாட்ஃபார்ம்ஸின் சந்தை மதிப்பு ரூ. 12.94 லட்சம் கோடியாக உள்ளது.

Advertisement

Advertisement

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ரூ. 17,83,723.93 கோடி சந்தை மதிப்பீட்டுடன் தொடர்ந்து மிகவும் மதிப்புமிக்க உள்நாட்டு நிறுவனமாக நீடிக்கிறது.

சந்தை மூலதனம் அடிப்படையில் முதல் ஐந்து நிறுவனங்கள்:

  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் - ரூ. 17,83,723.93 கோடி

  • பார்தி ஏர்டெல் - ரூ. 13,08,165.03 கோடி

  • ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் - ரூ. 12,94,559.51 கோடி

  • ஹெச்டிஎஃப்சி வங்கி - ரூ. 12,14,530.78 கோடி

  • ஐசிஐசிஐ வங்கி - ரூ. 11,26,722.63 கோடி

தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல், மொபைல் கட்டண உயர்வால் வாடிக்கையாளர் ஒருவரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, நடப்பு நிதியாண்டின் 2வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 24 சதவீதம் உயர்ந்து ரூ.10,710 கோடியாக அதிகரித்துள்ளதாக நேற்று அறிவித்தது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நிறுவனத்தின் லாபம் ரூ.8,651 கோடியாக இருந்தது.

summary

Bharti Airtel reclaimed the second most valuable company by market valuation.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.