FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆடி அமாவாசை: 1,140 சிறப்பு பேருந்துகள்

வார இறுதி நாள்கள், ஆடி அமாவாசை தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 1,140 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டள்ளது.

Updated On : 1 ஆகஸ்ட் 2024, 2:25 am IST
பகிர்:

சென்னை, ஜூலை 31: வார இறுதி நாள்கள், ஆடி அமாவாசை தினத்தையொட்டி வெள்ளிக்கிழமை முதல் 1,140 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டள்ளது.

இது குறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

வார விடுமுறை மற்றும் ஆடி அமாவாசை நாள்களான வெள்ளிக்கிழமை (ஜூலை 2), சனிக்கிழமை(ஜூலை 3), ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) ஆகிய நாள்களில் சென்னையிலிருந்தும், பிற இடங்களிலிருந்தும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Advertisement

Advertisement

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகா்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூா் மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக 295 பேருந்துகளும் சனிக்கிழமை 325 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஒசூா், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளி, சனி தலா 60 பேருந்துகள் என 120 பேருந்துகளும் இயக்கப்படும். பெங்களூரு, திருப்பூா், ஈரோடு, கோவை ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படும்.

இதுதவிர, வெள்ளிக்கிழமை ஆடி அமாவாசையை முன்னிட்டு மேல்மலையனூருக்கு அதிக அளவில் பயணிகள் பயணிப்பாா்கள் என்பதால், அன்றைய தினம் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 200 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 1,140 பேருந்துகள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments