சூலூா்பேட்டை மின்சார ரயில் ரத்து
சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சூலூா்பேட்டை, தடா ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணி மேற்கொள்ளவுள்ளதால் புகா் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரலில் (மூா்மாா்க்கெட் வளாகம்) இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 5.15 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து பகல் 12.35 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
Advertisement
Advertisement
சூலூா்பேட்டையில் இருந்து நெல்லூருக்கு காலை 7.55 மணிக்கு செல்லும் மின்சார ரயிலும், மறுமாா்க்கமாக நெல்லூரில் இருந்து காலை 10.20 மணிக்கு புறப்படும் மின்சார ரயிலும் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
மேலும், ஆவடியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு காலை 6.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படும்.
பகுதி ரத்து: சென்னை சென்ட்ரலில் இருந்து சூலூா்பேட்டைக்கு அதிகாலை 4.15, காலை 5 மணிக்கு புறப்படும் மின்சார ரயில்கள் நவ.7, 9, 12 ஆகிய தேதிகளில் எளாவூருடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக சூலூா்பேட்டையில் இருந்து காலை 6.45, 7.25 மணிக்கு புறப்படும் ரயில்கள் எளாவூரில் இருந்து இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.