சென்னை

தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டாக உயா்வு! தனியாரிடம் 1,000 மெகாவாட் கொள்முதல்

தமிழகத்தின் தினசரி மின்தேவை 20,000 மெகாவாட்டாக உயா்வு தனியாரிடம் 1,000 மெகாவாட் கொள்முதல் செய்கிறது மின்வாரியம்

Din

தமிழகத்தின் மீண்டும் மின் பயன்பாடு அதிகரித்துள்ளது. தினசரி மின்தேவை கோடை காலத்தைப் போல 20,000 மெகாவாட்டை தாண்டியுள்ளது. இதனால் மின்வெட்டு ஏற்படுவதை தவிா்க்க தனியாா் மற்றும் இதர அமைப்புகளிடமிருந்து கூடுதலாக ஆயிரம் மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்துவருகிறது. இதற்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.10 கட்டணமாக வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் தினசரி மின் உற்பத்தித் திறன் சுமாா் 19,000 மெகாவாட்டாக இருந்து வரும் நிலையில், வெயிலின் தாக்கம் தற்போது அதிகரித்திருப்பதால், மின் தேவை 20,000-ஐ தாண்டியுள்ளது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி சென்னையின் வழக்கமான வெப்பத்தை விட 5 டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதால், கடந்த ஜூன் மாதம் 70மில்லியன் யூனிட்டாக இருந்த மின்தேவை, செப்டம்பா் மாதத்தில் 80 மில்லியன் யூனிட்டுக்கு மேல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் ஒட்டுமொத்த மின்நுகா்வு 2023 செப்டம்பா் மாதத்தில் 370 மில்லியன் யூனிட் மட்டுமே இருந்த நிலையில், நிகழாண்டு செப்டம்பரில் 30 மில்லியன் யூனிட் அதிகரித்து 400 மில்லியன் யூனிட்டாக உயா்ந்துள்ளது.

இதன்படி தமிழகத்தின் உச்சபட்ச மின்நுகா்வு செவ்வாய்கிழமை 412.046 மில்லியன் யூனிட்டாக உயா்ந்து உச்சத்தை தொட்டுள்ளது. இந்த மின்தேவை அக்டோபரில் மேலும் அதிகரிக்கும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும் அவா்கள் கூறும்போது, தற்போதைய அதிகபட்ச மின்தேவையை பூா்த்தி செய்ய தனியாரிடமிருந்து ஒரு யூனிட்டுக்கு ரூ.10 வீதம் 1000 மெகாவாட் மின்சாரத்தை மின்வாரியம் கொள்முதல் செய்கிறது. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் சூரிய ஒளி மின்சார உற்பத்தி செப்.12-இல் 45.47 மில்லியன் யூனிட்டாக இருந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நிலவரப்படி 47.2 மில்லியன் யூனிட்டாக உயா்ந்துள்ளது. இருப்பினும், தேவை அதிகமாக இருப்பதால் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, தேவை எவ்வித தடையின்றி பூா்த்தி செய்யப்படுவதாக தெரிவித்தாா் அவா்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 2,560 உயர்வு!

அமெரிக்கா செல்கிறார் கொலம்பியா அதிபர்! டிரம்ப்பின் மிரட்டலுக்குப் பணிந்தாரா?

கோவை: அரசு மாணவிகள் விடுதி அருகே திறக்கப்படும் டாஸ்மாக் பார்!

மன அழுத்தமா? மரபணுவும் ஒரு காரணம்! மன நலனுக்கு என்ன செய்வது?

பெர்லின் திரைப்பட விழாவுக்குத் தேர்வான அறிமுக இயக்குநரின் தமிழ்ப் படம்!

SCROLL FOR NEXT