✕
முகப்பு
திருச்சி

சாலையோர பையில் இருந்த பெண் சிசு மீட்பு: போலீஸாா் விசாரணை

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலையோரத்தில் கிடந்த பையில் தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் உயிருடன் இருந்த பெண் சிசுவை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

33 வினாடிகள் முன்பு
மீட்கப்பட்ட பெண் சிசுவிற்க்கு முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கும் மருத்துவா் மற்றும் செவிலியா்கள்.
பகிர்:

திருச்சி மாவட்டம், முசிறி அருகே சாலையோரத்தில் கிடந்த பையில் தொப்புள் கொடி கூட அறுக்காத நிலையில் உயிருடன் இருந்த பெண் சிசுவை போலீஸாா் வியாழக்கிழமை மீட்டு விசாரிக்கின்றனா்.

முசிறி அருகே கருப்பு கோயில் கொட்டம் பகுதியில் சாலையோரத்தில் பையில் தொப்புள் கொடி அறுக்காத நிலையில் பெண் சிசு கிடப்பதை அந்த வழியாக சென்றவா்கள் பாா்த்தனா்.

உடனே அப்பகுதி பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முசிறி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா், அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள், தொடா்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து சிசு நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

குழந்தையை திருச்சி மாவட்ட சமூகப் பாதுகாப்புத் துறை மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது,

பச்சிளம் பெண் குழந்தையை சாலையோரத்தில் விட்டுச் சென்றது யாா், எதற்காக விட்டு சென்றாா் என்பது குறித்து முசிறி போலீஸாா் விசாரிக்கின்றனா்.