FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகள் மோதல்

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

23 செப்டம்பர் 2024, 12:20 am IST
புழல் சிறை
பகிர்:

புழல் சிறையில் நைஜீரிய பெண் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவா் காயமடைந்தாா்.

சென்னை புழல் சிறையில், பல்வேறு குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியாவைச் சோ்ந்த பெண் கைதிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென இந்த பெண் கைதிகளிடையே தகராறு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் ஒருவரையொருவா் கடுமையாக தாக்கிக்கொண்டனா்.

Advertisement

Advertisement

இதில் பெண் கைதி ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு வந்த சிறைக்காவலா்கள் அவா்களை தடுத்து சமாதானம் செய்து அழைத்துச் சென்றனா்.

மோதல் குறித்து புழல் சிறைத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments