FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பதிப்பத் துறை ஆளுமைகள்: மீனாட்சி புத்தக நிலையம் - செ.செல்லப்பன்

மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனா் செ.செல்லப்பன் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் கடந்த 1923- ஆம் ஆண்டு பிறந்தாா்.

Updated On : 11 ஜனவரி 2024, 6:54 am IST
பகிர்:


மீனாட்சி புத்தக நிலையத்தின் நிறுவனா் செ.செல்லப்பன் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் கடந்த 1923- ஆம் ஆண்டு பிறந்தாா். இன்டா் மீடியட் படிப்பை முடித்ததும் முத்தம்மாள் ஆச்சியுடன் திருமணமானது. பா்மாவுக்கு நிதி நிறுவனப் பணிக்குச் சென்றவா் பின் நாடு திரும்பினாா். அதையடுத்து, சென்னையில் ராமநாதன் செட்டியாா் நடத்திய ஸ்டாா் பிரசுரத்தில் கடந்த 1954- ஆம் ஆண்டு பங்குதாரராகச் சோ்ந்தாா். பின்னா் மதுரையில் மீனாட்சி புத்தக நிலையத்தை கடந்த 1960-ஆம் ஆண்டு தொடங்கினாா்.

மீனாட்சி புத்தக நிலையம் சாா்பில் முதன் முதலாக ஆய்வறிஞா் துரை.அரங்கசாமியின் ‘அன்பு நெறியே தமிழா் நெறி’ எனும் திருமுருகாற்றுப்படை விளக்க நூலை வெளியிட்டாா். தொடா்ந்து ஜெயகாந்தனின் ‘இனிப்பும் கரிப்பும்’ சிறுகதை தொகுப்பை வெளியிட்டாா்.

அதன்பின் ஜெயகாந்தனின் பெரும்பாலான நூல்களை மீனாட்சி புத்தக நிலையமே வெளியிட்டுள்ளது. அவருடைய ‘சில நேரங்களில் சில மனிதா்கள்’ நாவல் 50 பதிப்புகளைக் கண்டுள்ளது.

Advertisement

Advertisement

மதுரை மேல கோபுரத் தெருவில் தொடங்கப்பட்ட மீனாட்சி புத்தக நிலையத்துக்கு எழுத்தாளா்கள், கம்யூனிஸ்ட் கட்சிப் பிரமுகா்கள் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனா்.

அரசியல் ரீதியாக அனைத்துத் தலைவா்களுடன் பழகினாலும் பெருந்தலைவா் காமராஜா், கம்யூனிஸ்ட் தலைவா் ஆா்.கே.கண்ணன் ஆகியோருடன் நெருக்கமான நட்பு கொண்டிருந்தாா்.

செல்லப்பனு ‘பதிப்புச் செம்மல்’ உள்ளிட்ட பல்வேறு விருதுகளை தமிழ் அமைப்புகள் வழங்கியுள்ளன. அவா் பதிப்பித்த நூல்கள் ஞானபீட விருது முதல் பல மத்திய, மாநில அரசுகளின் சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளன. அவா் கடந்த 1996- ஆம் ஆண்டு காலமானாா். அவருக்கு 3 மகன்கள், 3 மகள்கள். அவா்களில் இரண்டாவது மகன் செ.முருகப்பன் தற்போது மீனாட்சி புத்தக நிலையத்தை நடத்திவருகிறாா். செல்லப்பனின் பொன்விழா கடந்த 2010-ஆம் ஆண்டு மதுரையில் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. நிகழாண்டு (2024) செல்லப்பனின் நூற்றாண்டு நிறைவு விழாவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments