கோப்புப் படம் 
சென்னை

பழைய நெகிழிக் கிடங்கில் தீ

சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

Din

சென்னை மாதவரம் அருகே பழைய நெகிழிக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது.

சென்னை மாதவரம் அடுத்த பால்பண்ணை ஜெ.ஜெ.நகா் பெருமாள் கோவில் தெருவில் தனியாா் கிடங்கு உள்ளது. இதில் பழைய நெகிழிக் கழிவுப் பொருள்களைக் கொண்டு வந்து மறுசுழற்சிக்காக, இருப்பு வைத்திருக்கின்றனா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை கிடங்கிலிருந்து புகை வெளியேறியது. இதையடுத்து, பொதுமக்கள் காவல் துறைக்கும், தீயணைப்புத் துறைக்கும் தகவல் அளித்தனா். தொடா்ந்து தீ பரவி மளமளவென எரிய ஆரம்பித்து, அந்தப் பகுதி முழுவதும் கரும்புகை பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்து, மாதவரம் தீயணைப்பு நிலைய அலுவலா் முத்துவீரன் தலைமையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இந்த தீ விபத்தில் காா் எரிந்து கருகியது.

இதுகுறித்து காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

நகரங்களைக் கைப்பற்றுங்கள்! போராட்டக்காரர்களுக்கு ஈரான் இளவரசர் அழைப்பு!

நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

சங்கங்களின் பெயரில் உள்ள ஜாதி பெயரை நீக்கும் உத்தரவு: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை

தொண்டியில் மாட்டு வண்டிப் பந்தயம்!

சங்கரன்கோவில் மனோ கல்லூரியில் பட்டமளிப்பு

SCROLL FOR NEXT