அடையாறில் லாரிகள் மோதி விபத்து! போக்குவரத்து பாதிப்பு!
அடையாறில் லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டது பற்றி...
சென்னை அடையாறு பகுதியில் இரண்டு லாரிகள் மோதி விபத்து ஏற்பட்டதில், வியாழக்கிழமை காலை போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
அடையாறு புற்றுநோய் மையத்துக்கு வெளியே ஓஎம்சிஏ சாலை வழியாக அதிவேகமாக வந்த கலவை லாரி, கிண்டியில் இருந்து அடையாறு நோக்கி வந்துகொண்டிருந்த கழிவுநீர் லாரி மீது மோதியதில் விபத்து ஏற்படுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கழிவுநீர் லாரி ஓட்டுநர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டார்.
Advertisement
Advertisement
இதில் கலவை லாரி கவிழ்ந்ததில் சாலையில் கலவைகள் கொட்டி, போக்குவரத்து ஒரு மணிநேரத்துக்கு மேலாக பாதிக்கப்பட்டது. கிரேன் மூலம் லாரி மீட்கப்பட்டு, சாலையில் மண் கொட்டிய பிறகு போக்குவரத்து சீரானது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.