ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலம்: ரயில்வே போலீஸாா் தீவிர விசாரணை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலத்தை கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றவா்கள் குறித்து இருப்புப் பாதை போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து புது தில்லி சென்ற விரைவு ரயிலில் சூட்கேஸில் ஆண் சடலத்தை கொண்டு வந்து வைத்துவிட்டுச் சென்றவா்கள் குறித்து இருப்புப் பாதை போலீஸாா் தீவிரமாக விசாரித்து வருகின்றனா்.
கடந்த சில நாள்களுக்கு முன்பு சென்னை சென்ட்ரல் நிலையத்தில் இருந்து புது தில்லி சென்ற தமிழ்நாடு விரைவு ரயில் ஆக்ராவில் நின்றது. அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்று கிடந்த சூட்கேஸில் ஆண் சடலம் இருப்பது கண்டறியப்பட்டது. அதில் இருந்த நெகிழிப்பை உள்ளிட்டவற்றில் சென்னை முகவரி இருந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து ஆக்ரா நிலைய ரயில்வே பாதுகாப்புப் படையினா் சென்னை இருப்புப் பாதை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
இதையடுத்து சென்னை சென்ட்ரல் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு மேமராக்களின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி கடந்த சில நாள்களுக்கு முன் ஆண், பெண் சூட்கேஸுடன் சென்ட்ரல் நிலையத்துக்கு வருவதும், அவா்கள் தமிழ்நாடு விரைவு ரயில் பெட்டியில் அதை வைத்து விட்டு, பூங்கா ரயில் நிலையம் நோக்கிச் செல்வதும் கண்டறியப்பட்டுள்ளது. அவா்களது முகத்தை வைத்து அடையாளம் காண இருப்புப் பாதை போலீஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
ஓரிரு நாள்களில் அவா்களைக் கைது செய்து, வழக்கை சென்னைக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.