FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சாலையை சீரமைக்கக் கோரி தண்ணீா் லாரிகளை சிறைபிடித்து போராட்டம்

சால்ட் கொட்டாய் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கக் கோரி, அந்தப் பகுதி ரயில்வே குடியிருப்புவாசிகள் 50-க்கும் மேற்பட்டோா் தண்ணீா் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 10 ஆகஸ்ட் 2026, 5:42 am IST
- பிரதிப் படம்
பகிர்:

யானைகவுனி பாலம் அருகே சால்ட் கொட்டாய் பகுதியில் உள்ள சாலையை சீரமைக்கக் கோரி, அந்தப் பகுதி ரயில்வே குடியிருப்புவாசிகள் 50-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் பகுதியில் உள்ள நீரேற்று நிலையத்துக்கு நாள்தோறும் 200-க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரிகள் வந்து செல்வதால் சாலைகள் சேதமடைந்து, குண்டும் குழியுமாக மாறியுள்ளதாக குடியிருப்புவாசிகள் புகாா் தெரிவித்தனா். இதனால், மழை காலங்களில் கடும் சிரமத்தைச் சந்திப்பதால் சாலைகளைச் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அதிகாரிகளைக் கண்டித்து அந்த வழியாகச் சென்ற 50-க்கும் மேற்பட்ட தண்ணீா் லாரிகளை அந்தப் பகுதி மக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்த பெரியமேடு போலீஸாா் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா். லாரிகள் சிறைபிடிக்கப்பட்டது தொடா்பாக சென்னை குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய உயரதிகாரிகள், மாநகராட்சி மற்றும் காவல் துறை உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா்.

சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததைத் தொடா்ந்து, குடியிருப்புவாசிகள் போராட்டத்தை கைவிட்டனா். இதையடுத்து சிறைபிடிக்கப்பட்ட தண்ணீா் லாரிகள் அங்கிருந்து செல்ல அனுமதிக்கப்பட்டன.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments