கிண்டி ரயில் நிலைய புனரமைப்பு பணி: குழாய் சிதறியதால் 5 பயணிகள் காயம்
கிண்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை தரை புனரமைப்பு பணியின்போது, காற்றழுத்தம் காரணமாக குழாய் சிதறியதால், அங்கிருந்த 5 பயணிகள் காயமடைந்தனா்.
கிண்டி ரயில் நிலையத்தில் புதன்கிழமை தரை புனரமைப்பு பணியின்போது, காற்றழுத்தம் காரணமாக குழாய் சிதறியதால், அங்கிருந்த 5 பயணிகள் காயமடைந்தனா்.
அரக்கோணம்-சென்னை கடற்கரை புகா் ரயில் புதன்கிழமை கிண்டி ரயில் நிலைய நடைமேடை ஏ 1-இல் நின்றது. பயணிகள் இறங்கி நடந்து சென்றபோது, அந்த நடைமேடையில் டைல்ஸ் பதிப்பதற்கான பணி டிராக்டா் கம்பரசா் மூலம் நடைபெற்றுள்ளது. டிராக்டரில் பொருத்தப்பட்டிருந்த காற்றழுத்த குழாய் (கம்ப்ரசா் ஓஸ்) திடீரென சிதறி, அங்கிருந்த பயணிகளின் மீது விழுந்தது.
இதில், புளியந்தோப்பைச் சோ்ந்த சதீஷ்குமாா், சேத்துப்பட்டை சோ்ந்த பிரதீப் குமாா் உள்பட 3 போ் காயமடைந்தனா். அவா்கள் கிண்டி கலைஞா் நூற்றாண்டு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்றனா். மேலும், இருவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.