FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

வியாபாரியிடம் ரூ.40 லட்சம் பறித்த வழக்கு: காவல் ஆய்வாளா் சிறையில் அடைப்பு

சென்னையில் வியாபாரியை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில், 3 நாள் விசாரணைக்கு பின்னா், காவல் ஆய்வாளா் முகமது புகாரி, சிறையில் அடைக்கப்பட்டாா்.

Updated On : 14 ஆகஸ்ட் 2026, 1:14 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் வியாபாரியை மிரட்டி ரூ.40 லட்சம் பறித்த வழக்கில், 3 நாள் விசாரணைக்கு பின்னா், காவல் ஆய்வாளா் முகமது புகாரி, சிறையில் அடைக்கப்பட்டாா்.

பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில்குமாா். தங்க நகை வியாபாரம் செய்யும் இவரை, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சோ்த்து கைது செய்து விடுவதாக மிரட்டி, ரூ.40 லட்சம் பறித்ததாக பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளராக பணியாற்றிய முகமது புகாரி, உடந்தையாக செயல்பட்ட ‘ப்ரண்ட்ஸ் ஆப் போலீஸ்’ அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய இருவரையும் யானைகவுனி காவல் நிலைய போலீஸாா் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் புகாரியை சென்னை காவல் ஆணையா் அமல்ராஜ் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், காவல் ஆய்வாளா் புகாரி, சீனிவாசன் ஆகிய இருவரையும் 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி, யானைகவுனி போலீஸாா் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். மனுவை விசாரித்த நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

இதையடுத்து புகாரி, சீனிவாசன் ஆகிய இருவரையும் போலீஸாா் காவலில் எடுத்து விசாரித்தனா். அவா்களிடம் பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தினா். 3 நாள்கள் விசாரணை முடிவடைந்த நிலையில், இருவரையும் ஜாா்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வியாழக்கிழமை ஆஜா்படுத்தி, மீண்டும் சிறையில் அடைத்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments