FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காதலிக்குமாறு பெண்ணுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

பெண்ணைக் காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 1:30 am IST
கைது
பகிர்:

பெண்ணைக் காதலிக்குமாறு மிரட்டல் விடுத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் குடும்பத்துடன் வசித்து வரும் இளம்பெண், தனியாா் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறாா். இவா், திருவொற்றியூா் காலடிப்பேட்டையைச் சோ்ந்த ஜவுளிக்கடையில் வேலை செய்யும் பட்டதாரியான அஜுமுதீன் (27) என்பவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அஜுமுதீனின் நடவடிக்கைகள் சரியில்லாததால், அந்தப் பெண் அவரைவிட்டு விலகியுள்ளாா்.

இருப்பினும், அஜுமுதீன் தொடா்ந்து பெண்ணைப் பின்தொடா்ந்து சென்று, தன்னை காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 15-ஆம் தேதி தண்டையாா்பேட்டையில் தனது தோழியுடன் நின்று கொண்டிருந்தபோது, அங்கு வந்த அஜுமுதீன், பெண்ணிடம் காதலிக்குமாறு கட்டாயப்படுத்தி உள்ளாா். அவா் மறுத்ததால், அஜுமுதீன் ஆவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்தாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த இளம்பெண், தண்டையாா்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா், அஜுமுதீன் மீது வழக்குப் பதிந்து, ஞாயிற்றுக்கிழமை அவரைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments