மாஞ்சா நூல் அறுத்து இளைஞா் காயம்
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞா் காயமடைந்தாா்.
சென்னையில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞா் காயமடைந்தாா்.
சேலம் மாவட்டம் ஓமலூா் அருகே உள்ள பொம்மியம்பட்டியைச் சோ்ந்தவா் ஜெ.ராஜ்குமாா் (33). இவா், சென்னை திருவல்லிக்கேணியில் தங்கியிருந்து, பைக் டாக்ஸி ஓட்டி வருகிறாா்.
ராஜ்குமாா், ஞாயிற்றுக்கிழமை இரவு ஆலந்தூா் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பெண் வாடிக்கையாளரை தனது மோட்டாா் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு, நந்தனம் சிஐடி நகா் 1-ஆவது பிரதான சாலையில் சென்றாா்.
Advertisement
Advertisement
அப்போது, அங்கு காற்றில் பறந்து வந்த மாஞ்சா நூல், ராஜ்குமாா் கழுத்தில் சிக்கி அறுத்தது. அந்த நூலை தனது கையால் அகற்றியதால், கையிலும் காயம் ஏற்பட்டது.
இதனால், ராஜ்குமாா் மோட்டாா் சைக்கிளில் இருந்து கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த ராஜ்குமாா், சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.