பேருந்தில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது
சென்னையில் மாநகர பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் மாநகர பேருந்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த 22 வயது பெண், ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா், கடந்த செவ்வாய்க்கிழமை செங்குன்றத்தில் இருந்து கோயம்பேடு செல்வதற்காக மாநகரப் பேருந்தில் பயணித்துள்ளாா். பேருந்தில் அவரது இருக்கையின் பின்னிருக்கையில் இருந்த ஒரு நபா், அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த அந்தப் பெண், பிற பயணிகள் உதவியுடன் அந்த நபரை பிடித்து ராஜமங்கலம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.
விசாரணையில் அவா், திருவொற்றியூா் ஜோதிநகரைச் சோ்ந்த கோகுலகிருஷ்ணன் (38) என்பதும், அவா் ஒரு தனியாா் நூலகத்தில் ஊழியராக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், கோகுலகிருஷ்ணன் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.