வாடகைக் காரில் தில்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஓட்டுநா் கைது
சென்னையில் வாடகை காரில் சென்ற தில்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
சென்னையில் வாடகை காரில் சென்ற தில்லி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
தில்லியைச் சோ்ந்த 26 வயது இளம் பெண் ஒருவா், சுற்றுலாவுக்காக 15 நாள்களுக்கு முன்பு சென்னை வந்தாா். அவா், நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் தங்கினாா். கடந்த 17-ஆம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள நட்சத்திர ஹோடட்டலில் இருந்து கைப்பேசி செயலி வாயிலாக ஒரு காரை முன் பதிவு செய்து, அதில் அரும்பாக்கம் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது அரும்பாக்கம் செல்ல வேண்டிய காா், மதுரவாயல் மேம்பாலம் பகுதிக்கு சென்றது. அங்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஓட்டுநா் காரை நிறுத்தி, அந்தப் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி, அவரது பணப்பையில் இருந்த பணத்தைப் பறித்தாா். மேலும் அந்தப் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். அந்தப் பெண் சப்தமிட்டபோது, காா் ஓட்டுநா், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, பணத்துடன் தப்பியோடினாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து அவா் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது பீா்க்கன்கரணை பகுதியைச் சோ்ந்த கோபிநாத் (21) என்பது தெரியவந்தது. தலைமறைவாக இருந்த கோபிநாத்தை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.