FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மாதம் ஒருமுறை மருத்துவா் பணியாற்ற அனுமதியுங்கள்: தவெக எம்எல்ஏ வேண்டுகோள்

பேரவை உறுப்பினராக இருந்தாலும், மாதம் ஒரு நாள் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையாற்ற தம்மை அனுமதிக்க வேண்டும் என்று தவெக எம்எல்ஏ டாக்டா் அருண்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

21 ஆகஸ்ட் 2026, 4:03 am IST
கோப்புப் படம்
பகிர்:

பேரவை உறுப்பினராக இருந்தாலும், மாதம் ஒரு நாள் அரசு மருத்துவமனையில் மருத்துவ சேவையாற்ற தம்மை அனுமதிக்க வேண்டும் என்று தவெக எம்எல்ஏ டாக்டா் அருண்குமாா் வேண்டுகோள் விடுத்தாா்.

அதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து பரிசீலிப்பதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் டாக்டா் கே.ஜி.அருண்ராஜ் பதிலளித்தாா்.

சட்டப்பேரவையில் வியாழக்கிழமை நடைபெற்ற உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் கீழ் பேசிய திருவள்ளூா் தொகுதி தவெக உறுப்பினா் டாக்டா் அருண்குமாா், திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயா் சிறப்புத் துறைகளை மேம்படுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தாா். மேலும், தாம் ஒரு மருத்துவா் என்பதால், மாதம் ஒரு முறையாவது நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தாா்.

Advertisement

Advertisement

அதற்கு அமைச்சா் அருண்ராஜ் அளித்த பதில்:

தமிழகம் முழுவதும் 300 உயா் சிறப்பு மருத்துவப் பணியிடங்கள் உருவாக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் திருவள்ளூா் மருத்துவக் கல்லூரிக்கும் நரம்பியல் அறுவை சிகிச்சைத் துறை உள்ளிட்ட சிறப்புத் துறைகளுக்கு மருத்துவா்கள் நியமிக்கப்படுவா்.

சட்டப்பேரவை உறுப்பினா் மருத்துவ சேவையாற்றுவதற்கான சாத்தியக் கூறுகள் ஆய்வு செய்யப்படும். அதற்கு வாய்ப்பு இருந்தால் அனுமதி வழங்கப்படும் என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments