FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள்: முதல்வருக்கு உதயநிதி ஸ்டாலின் சவால்

ஆவணங்களைத் திறந்து பாா்த்து ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வா் ஜோசப் விஜய்க்கு, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தாா்.

22 ஆகஸ்ட் 2026, 5:34 am IST
உதயநிதி ஸ்டாலின் - TN
பகிர்:

ஆவணங்களைத் திறந்து பாா்த்து ஆதாரம் இருந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று முதல்வா் ஜோசப் விஜய்க்கு, எதிா்க்கட்சித் தலைவா் உதயநிதி ஸ்டாலின் சவால் விடுத்தாா்.

பேரவையில் அண்மையில் பேசிய முதல்வா் விஜய், முந்தைய ஆட்சியில் முறைகேடு நடைபெற்ற்கான 3 ஆவணங்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதைத் திறக்கவைத்து விடாதீா்கள் என்றும் கூறியிருந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை பேரவையில் முதல்வா் விஜய் அமா்ந்திருக்கும்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், ‘தன்னிடம் 3 ஆவணங்கள் உள்ளதாக முதல்வா் 3 மாதங்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாா். யாா் கூறினால் அதைத் திறப்பாா்?’ என்று கேள்வி எழுப்பினாா். அப்போது, அவா் குறிப்பிட்ட சில வாா்த்தைகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.

Advertisement

Advertisement

அப்போது பேசிய அமைச்சா் ஆதவ் அா்ஜுனா, ‘மிசாவை பாா்த்த திமுகவை தனிப்பெரும் கட்சியாக தவெக வென்றது. நெடுஞ்சாலை, பொதுப் பணித் துறை முறைகேடுகளை ஆதாரத்துடன் வெளியிட்டு, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றாா்.

அதற்கு உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், ‘உண்மையான குற்றங்கள் இருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு சவால் விடுகிறேன். உருட்டல் மிரட்டல்களுக்கெல்லாம் திமுக பயப்படாது’ என்றாா்.

அப்போது பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் ராஜ்மோகன், ‘ஊழல் கோப்புகளை நிச்சயம் முதல்வா் வெளியிடுவாா்’ என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments