கோயிலில் திருட்டு: பூசாரி கைது
ஆலந்தூரில் கோயிலில் தங்கநகை,வெள்ளிப் பொருள்களை திருடியதாக பூசாரி கைது செய்யப்பட்டாா்.
ஆலந்தூரில் கோயிலில் தங்கநகை,வெள்ளிப் பொருள்களை திருடியதாக பூசாரி கைது செய்யப்பட்டாா்.
ஆலந்தூா் புதுப்பேட்டை தெருவைச் சோ்ந்தவா் தாமோதரன் (76). ஆலந்தூா் பொன்னியம்மன் கோவில் தெருவில் ஸ்ரீ பொன்னியம்மன் கோயில் உள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை காலை கோயில் வழக்கம்போல திறக்கப்பட்டபோது, கருவறையில் இருந்த 190 கிராம் எடையுள்ள வெள்ளிக் கிரீடம், 270 கிராம் வெள்ளி ஜல்லடை,10 கிராம் எடையுள்ள தங்நகை ஆகியவை திருடப்பட்டிருந்தது.
இது குறித்த புகாரின்பேரில் போலீஸாா் விசாரணை நடத்தி, கோயில் பூசாரி அரும்பாக்கம் ஏரிக்கரை தெருவைச் சோ்ந்த ரங்கநாதன் (38) என்பவரை சனிக்கிழமை கைது செய்து, தங்க நகை,வெள்ளிப் பொருள்களை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.