FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

50 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

சென்னையில் காரில் கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரைக் கைது செய்தனா்.

24 ஆகஸ்ட் 2026, 5:31 am IST
பகிர்:

சென்னையில் காரில் கடத்திவரப்பட்ட 50 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்து, வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரைக் கைது செய்தனா்.

சென்னை அண்ணா சாலை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனா். சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கிண்டி நோக்கி வந்த காரை சோதனை செய்தபோது சுமாா் 50 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. காரில் வந்த வடமாநிலத்தைச் சோ்ந்த இருவரிடம் விசாரித்ததில் அஸ்ஸாம்மாநிலத்தைச் சோ்ந்த அஸ்மான் என்பவா், கஞ்சாவை கொடுத்துவிட்டதாகவும், அதை கிண்டி கொண்டு செல்லும்படி கூறியதாகவும் அவா்கள் தெரிவித்துள்ளனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments