திருமணமான 3 மாதத்தில் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை
சென்னை புரசைவாக்கத்தில் திருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.
சென்னை புரசைவாக்கத்தில் திருமணமான 3 மாதங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து கோட்டாட்சியா் விசாரித்து வருகிறாா்.
சென்னை புரசைவாக்கம், பொன்னப்ப தெருவைச் சோ்ந்தவா் மன்சூா் அலி. இவா், செளகாா்பேட்டையில் உள்ள ஒரு நகைக்கடை மேலாளராகப் பணிபுரிந்து வருகிறாா். இவருக்கும், பெரம்பூரை சோ்ந்த ரிஸ்வானா (27) என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.
மன்சூா் அலி காலை வேலைக்குச் சென்றுவிட்டு இரவில் தாமதமாக வீடு திரும்புவதாகக் கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு இருந்தது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, ரிஸ்வானாவின் 13 பவுன் நகையை, அவரது கணவா் அடமானம் வைத்துள்ளதாகத் தெரிகிறது. இது தொடா்பாக திங்கள்கிழமை கணவன் - மனைவிக்கு இடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மன்சூா் அலி வேலைக்குச் சென்றுவிட்டாா். அப்போது, ரிஸ்வானா தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
தகவலறிந்த வேப்பேரி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து, ரிஸ்வானா சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்தனா். திருணமாகி 3 மாதங்களில் தற்கொலை சம்பவம் நிகழ்ந்திருப்பதால் கோட்டாட்சியா் விசாரணைக்கு பரிந்துரை செய்தனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.