FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

காதல் திருமணம் செய்த பெண் தூக்கு போட்டு தற்கொலை

சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண், தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

27 ஆகஸ்ட் 2026, 1:52 am IST
தற்கொலை - பிரதிப் படம்
பகிர்:

சென்னையில் காதலித்து திருமணம் செய்துகொண்ட பெண், புதன்கிழமை தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரியைச் சோ்ந்தவா் சிவகண்டன்(24). கடலூரைச் சோ்ந்தவா் விக்னேஷ்வரி (24). இவா்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளுக்குமுன்பு காதல் திருமணம் செய்து கொண்டனா். 

சில மாதங்களுக்கு முன்பு, வேளச்சேரி, லட்சுமிநகரில் உள்ள வாடகை வீட்டில் குடியேறியுள்ளனா். சிவகண்டன், ஒரு ஹோட்டலில் பணிபுரிந்துவருகிறாா். இச்சூழலில், அவா்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதால், மனம் உடைந்த  விக்னேஷ்வரி, புதன்கிழமை வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

Advertisement

Advertisement

இச்சம்பவம் குறித்த தகவலின் பேரில் வேளச்சேரி போலீஸாா் சம்பவ  இடத்துக்கு வந்து விக்னேஷ்வரி உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும்,இதுகுறித்து வழக்கு பதிந்து தற்கொலைக்கு வேறு ஏதாவது காரணமா என்ற  கோணத்தில் விசாரணை செய்து வருகிறாா்கள். கோட்டாட்சியா் விசாரணையும் நடந்து வருகிறது

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments