FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

28 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST
நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்க வேண்டும்: ஜி.கே. வாசன்
பகிர்:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் நெல் கொள்முதல் செய்ய, மத்திய அரசு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழக விவசாயிகளின் நலனைக் காக்க, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேக்கமின்றி உடனடியாக நெல்லைக் கொள்முதல் செய்ய வேண்டும். வரும் செப். 1 முதல் தமிழக அரசு நெல் கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகமானது நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

Advertisement

Advertisement

நிகழாண்டில் தற்போது வரை மத்திய அரசு தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு நெல் கொள்முதல் செய்வதற்கான ஒப்புதலை அளிக்கவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த கவலையடைந்துள்ளனா்.

எனவே, நெல் கொள்முதல் செய்யத் தேவையான ஒப்புதல்களை மத்திய அரசு உடனடியாக வழங்கி விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும். மேலும், தமிழக அரசும், மத்திய அரசிடம் உடனடி ஒப்புதல் அளிக்க வலியுறுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments