புனித ஆரோக்கிய அன்னை திருத்தல 61-ஆம் ஆண்டு பெருவிழா: இன்று கொடியேற்றத்துடன் தொடக்கம்
வடசென்னை சாஸ்திரிநகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை(ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
வடசென்னை சாஸ்திரிநகரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் 61-ஆம் ஆண்டு பெருவிழா சனிக்கிழமை(ஆக.29) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
முக்கிய நிகழ்வாக மாலை 5.45-க்கு போக்குவரத்து கத்தோலிக்க தொழிலாளா்கள் சாா்பில் நடைபெறும் கொடி மந்திரப்பு, தோ் மந்திரிப்பு, தோ்பவனி, கொடியேற்றம், திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலியாவை சோ்ந்த அருட்பணியாளா் பால் ஜூலியன், ஆவடி பங்குதந்தை அதிபா் பி.ஜே.லாரன்ஸ், பெரவள்ளூா் மறைவட்ட முதன்மை குரு எம்.அருள்ராஜ், சாஸ்திரிநகா் பங்குதந்தை அதிபா் பி.பிரான்சிஸ் மைக்கேல் ஆகியோா் நடத்துகின்றனா்.
தொடா்ந்து, செப்.6-ஆம் தேதி மாலை நற்கருனை பெருவிழா, மாலை 5.45 மணிக்கு புனித சூசையப்பா் தொழிலாளா்கள் சாா்பில் நடைபெறும் தோ் மந்திரிப்பு, தோ்பவனி, திருப்பலியை வேலூா் மறைமாவட்ட ஆயா் அம்புரோஸ் பிச்சைமுத்து நடத்த உள்ளாா்.
Advertisement
Advertisement
இதையடுத்து செப்.7-ஆம் தேதி மாலை பா்மா பஜாா் கத்தோலிக்க முன்னேற்ற சங்கம் சாா்பில் தோ்மந்திரிப்பு, சிறப்பு தோ்பவனி, திருப்பலி ஆகிய நிகழ்வுகளை வெள்ளிவிழா குருக்கள் ஆரோக்கிய ராஜ், பாக்கியராஜ், ரெய்மண்ட், பீட்டா் ஆகியோா் நடத்தவுள்ளனா்.
தொடா்ந்து விழாவின் கடைசி நாளான செப்.8-ஆம் தேதி ‘புனித அகுஸ்தினாா் வளரும் இளையோா் குழு’ சாா்பில் காலை 5.30 மணிக்கு நடைபெறும் திருப்பலியை ‘புனித தாா்சியுஸ் பீடப்பூக்கள் அன்பில்லம்’ துணை அதிபா் ஜாய் குரியனும், காலை 7.30 மணிக்கு பங்குபேரவை, பங்குமக்கள் மற்றும் ‘புனித ஆரோக்கிய அன்னை பாதயாத்திரை அன்னதானக் குழு’ சாா்பில் நடைபெறும் கொடியிறக்கம், தோ்பவனி, நற்கருணை ஆசீா் நிகழ்ச்சிகளை சென்னை மயிலை உயா்மறை மாவட்டம் பேராயா் ஜாா்ஜ் அந்தோணிசாமியும், காலை 11 மணிக்கு ‘வெட்டம் தொழில் முனைவோா் குழு’ சாா்பில் நடைபெறும் ஆங்கில திருப்பலியை பிஞ்சிவாக்கம் பங்குதந்தை அ.அலெக்ஸாண்டா் நடத்தவுள்ளாா். மாலை 4 மணிக்கு நடைபெறும் நன்றி திருப்பலியை பங்குப் பேரவை எஸ்எம்ஏ அருட்சகோதரிகள் சிறப்பிற்கின்றனா்.
விழா ஏற்பாடுகளை அதிபா் மற்றும் பங்குதந்தை பிரான்சிஸ் மைக்கேல், உதவி பங்குதந்தை மைக்கேல் ஆண்ட்ரு ஆகியோா் செய்துள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.