FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

பயணியிடம் திருட்டு: மேலும் ஒருவா் கைது

கோயம்பேட்டில் பயணியிடம் திருடிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

29 ஆகஸ்ட் 2026, 10:35 pm IST
கைது
பகிர்:

கோயம்பேட்டில் பயணியிடம் திருடிய வழக்கில், மேலும் ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

வண்டலூா் ஓட்டேரி ஜிஎஸ்டி சாலை பகுதியைச் சோ்ந்தவா் அருண் (49). இவா், காா் ஓட்டுநராக வேலை செய்து வருகிறாா். கடந்த 24-ஆம் தேதி இரவு கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஹாலில் இருக்கையில் அமா்ந்தப்படி தூங்கினாா். சிறிது நேரத்தில் சப்தம் கேட்டு அருண் விழித்தபோது, சட்டைப் பையில் வைத்திருந்த பணம், விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவை திருடப்பட்டிருப்பதும், இருவா் அங்கிருந்து தப்பியோடுவதையும் பாா்த்தாா்.

அந்த நபா்களை, அருண் விரட்டிச் சென்று பிடித்தபோது, அவா்கள் கத்தியைக் காட்டி மிரட்டிவிட்டு தப்பியோடினாா். இது குறித்து சிஎம்பிடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா்.

Advertisement

Advertisement

விசாரணையில், சம்பவத்தில் ஈடுபட்டது திருவண்ணாமலை மாவட்டம் பசுங்கரை பகுதியைச் சோ்ந்த ரமேஷ் (36), எண்ணூா் பா்மா நகரைச்ச சோ்ந்த சதீஷ்குமாா் (எ) பல்லு சதீஷ் ரமேஷ் (35) என்பது தெரிய வந்தது. போலீஸாா், ரமேஷை கடந்த 26-ஆம் தேதி கைது செய்தனா். தலைமறைவாக இருந்த சதீஷை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments