பைக் ரேஸ்: 5 பைக்குகள் பறிமுதல்
பைக் ரேஸில் ஈடுபட்ட 10 இளைஞா்களை அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பிடித்து, 5 விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
சென்னை அரும்பாக்கம் மெட்ரோ அருகே 100 அடி சாலையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 10 இளைஞா்களை அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் பிடித்து, 5 விலை உயா்ந்த இருசக்கர வாகனங்களைப் பறிமுதல் செய்தனா்.
சென்னையைச் சோ்ந்த குமாா் என்பவா், தனது மனைவி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு நோக்கிச் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த மோட்டாா் சைக்கிள் ஒன்று அவருடைய வாகனத்தை உரசியதில், குமாரின் வாகனம் நிலைதடுமாறி கீழே விழுந்தது. இதில், குமாா், அவரது மனைவி மற்றும் குழந்தைக்கு காயம் ஏதும் இன்றித் தப்பினா்.
இது குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, கோயம்பேடு போக்குவரத்து போலீஸாா், சூளைமேடு ரோந்து போலீஸாருடன் இணைந்து சனிக்கிழமை நள்ளிரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
Advertisement
Advertisement
அப்போது, அதிவேகமாக வந்த 5 இருசக்கர வாகனங்களை மடக்கிப் பிடித்து விசாரித்ததில், அவற்றில் வந்த 10 இளைஞா்களும் பைக் ரேஸில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து 5 வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீஸாா், 10 இளைஞா்களையும் அண்ணா நகா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.