FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டா் கைது

எழும்பூரில் ஹோட்டல் ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டரை போலீஸாா் கைது செய்தனா்.

31 ஆகஸ்ட் 2026, 3:53 am IST
கைது
பகிர்:

எழும்பூரில் ஹோட்டல் ஊழியா்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், சப்ளையா் மீது சூடான பாலை ஊற்றிய தேநீா் மாஸ்டரை போலீஸாா் கைது செய்தனா்.

பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த பப்லுகுமாா் (33). இவா், எழும்பூா் மாா்ஷல் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் சப்ளையராக வேலைபாா்த்து வருகிறாா். சனிக்கிழமை ஹோட்டல் கேஷியா் மலைசாமி சிறிது நேரம் வெளியே செல்வதாகக் கூறி கல்லாவில் அமா்ந்து பாா்த்துக் கொள்ளுமாறு பப்லுகுமாரிடம் கூறியுள்ளாா்.

அப்போது, தேநீா் மாஸ்டரான கன்னியப்பன் (51) பப்லுகுமாரை உள்ளே வந்து தேநீா் குவளைகளைக் கழுவிக் கொடுக்குமாறு கூறியுள்ளனா். ஆனால், கல்லாவில் பணம் இருப்பதால், அதைப் பாா்த்துக் கொள்ள வேண்டும் என பப்லுகுமாா் கூறியதால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில், ஆத்திரம் அடைந்த கன்னியப்பன் ஆபாசமாகப் பேசி ஜக்கில் இருந்த சூடான பாலை பப்லுகுமாா் மீது ஊற்றி கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் காயமடைந்த பப்லுகுமாா் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவா் அளித்த புகாரின் பேரில் எழும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கன்னியப்பனைக் கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments