மின் இணைப்பு பெற ரூ.4 ஆயிரம் லஞ்சம்: அதிகாரி கைது
சென்னை அண்ணா நகரில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகரில் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக மின்வாரிய அதிகாரி கைது செய்யப்பட்டாா்.
சென்னை அண்ணா நகா் 9-ஆவது பிரதான சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராகப் பணிபுரிபவா் தியாகராஜன். இவா் அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு நபருக்கு, புதிய மின் இணைப்பு வழங்குவதற்கு ரூ.4 ஆயிரம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
ஆனால், லஞ்சம் வழங்க விரும்பாத அந்த நபா், சென்னை லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவில் புகாா் செய்தாா். புகாரின் அடிப்படையில் அப் பிரிவு போலீஸாா், அந்த நபரிடம் ரசாயனம் தடவிய ரூ.4 ஆயிரத்தை கொடுத்து, அதை தியாகராஜனிடம் வழங்கும்படி கூறி அனுப்பி வைத்தனா்.
Advertisement
Advertisement
அதன்படி அந்த நபா், மின்வாரிய அலுவலகத்தில் வைத்து தியாகராஜனிடம் பணத்தைக் கொடுத்தபோது, அந்த பகுதியில் மறைந்திருந்த போலீஸாா், தியாகராஜனைப் பிடித்து கைது செய்தனா். அவரிடம் போலீஸாா், விசாரணை நடத்தி, வழக்குப் பதிந்து கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.